Jan 16, 2026
Thisaigal NewsYouTube
17 மில்லியன் பார்வைகளைக் கடந்த `ஜிங்குச்சா' பாடல்
சினிமா

17 மில்லியன் பார்வைகளைக் கடந்த `ஜிங்குச்சா' பாடல்

Share:

மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் கிட்டதட்ட முடியும் தருவாயில் உள்ளது. இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், 'தக் லைப்' திரைப்படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' பாடல் நேற்று வெளியிடப்பட்டது. பாடல் வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது. அதில் கமல் மற்றும் சிம்பு நடனமாடும் காட்சிகள் சிறப்பாக உள்ளன. இந்நிலையில் பாடல் வெளியாகி ஒரே நாளில் யூடியூபில் 17 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இப்பாடலை கமல்ஹாசன் வரிகளில் ஆதித்யா, வைஷாலி சமந்த், சக்தி ஸ்ரீ கோபாலன் இணைந்து பாடியுள்ளனர்.

Related News