Oct 20, 2025
Thisaigal NewsYouTube
ஜிவி பிரகாஷ் விவாகரத்து முடிவுக்கு காரணம் சைந்தவி அம்மா தான்! நடந்தது என்ன?
சினிமா

ஜிவி பிரகாஷ் விவாகரத்து முடிவுக்கு காரணம் சைந்தவி அம்மா தான்! நடந்தது என்ன?

Share:

இந்தியா, மே 14-

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்துக்கு காரணம், ஒருவகையில் சைந்தவியின் தாயார் தான் காரணம் என மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறு வயதிலேயே, ஏ.ஆர்.ரகுமான் இசையில் சில பாடல்களை பாடி பிரபலமான ஜிவி பிரகாஷ்... தன்னுடைய மாமாவிடம் இசையை கற்றுக்கொண்டு ஒரு இசையமைப்பாளராக அவதாரம் எடுத்தவர். ஜிவி பிரகாஷின் அம்மா ரிஹானாவும் பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் பிரபலமானவர்.

ஜிவி பிரகாஷ் கடந்த 2006-ஆம் ஆண்டு, வெளியான 'வெயில்' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தன்னுடைய கேரியனை துவங்கிய நிலையில், முதல் படத்திலேயே இவரின் இசை அதிகம் பேசப்பட்டது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற, 'உருகுதே மருகுதே..', 'வெயிலோடு விளையாடி' ஆகிய படங்கள் இன்று வரை பல ரசிகர்களின் ஃபேவரட் லிஸ்டில் உள்ளது.

பின்னர் ஓரம் போ, கிரீடம், பொல்லாதவன், குசேலன், ஆனந்த தாண்டவம் உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து, முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ளார். இசையை தாண்டி, பாடகர், நடிகர், தயாரிப்பாளராகவும் உள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

இவர் 10-ஆம் வகுப்பு படிக்கும் போதே, அதே பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்த சைந்தவி என்பவரை காதலிக்க துவங்கிய நிலையில்.. இவர்களது காதல் 2013-ஆம் ஆண்டு திருமணத்திலும் முடிந்தது. ஜிவி - சைந்தவி ஜோடிகளுக்கு அன்வி என்கிற மகள் ஒருவரும் உள்ளார். திருமணம் ஆகி பல வருடங்களுக்கு பின்பே இவர்களுக்கு குழந்தை பிறந்தது.

இந்நிலையில் நேற்று இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக தங்களின் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்த நிலையில், இதற்க்கு என்ன காரணம் என பலர் மண்டையை பிய்த்துகொள்ளும் நிலையில், தற்போது மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், சைந்தவியின் தாயாரும் இவர்களின் விவாகரத்து ஒருவகையில் காரணம் என கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் சம்பாதிக்கும் பணத்தை சைந்தவி தனது தாய் வழியாக செலவு செய்தார். அதே போல் முக்கியமாக ஜிவி பிரகாஷ் தமிழ், திராவிட அரசியல் மைண்ட் செட் உள்ளவர். ஆனால் சைந்தவியின் அம்மா சனாதனத்தை சார்ந்தவர். அவர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் தான் அமித் ஷாவை சந்தித்தார். இது அவருக்கு பிடிக்கவில்லை. இருவரும் பிரிவதற்கு இதுவும் ஒரு காரணம் என்றும், விஜய் உள்ளிட்டோர் சில பிரபலங்கள் சமாதானம் செய்ய பேசியும் இரண்டு பேரும் தங்களது விவாகரத்து முடிவை கைவிடவில்லை என தெரிவித்துள்ளார்.

Related News