Jan 16, 2026
Thisaigal NewsYouTube
விஜய் பட நடிகர் கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி மரணம்
சினிமா

விஜய் பட நடிகர் கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி மரணம்

Share:

ஷிகான் ஹூசைனி பத்ரி, காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர். இவர் பிரபல கராத்தே மாஸ்டரும் கூட. இவருடைய அதிரடி சமையல் நிகழ்ச்சியை 90ஸ் கிட்ஸால் மறக்கவே முடியாது.

இவர் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 22 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஷிகான் ஹுசைனி உயிரிழந்துள்ளார். இவருடைய மரணம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

முன்னதாக ஷிகான் ஹுசைனி தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்வதாக அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News