விஜய்யுடன் லியோ படத்தை முடித்தக் கையோடு ரஜினியுடன் இணைந்து கூலி படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஷ். ரஜினியுடன், சத்யராஜ், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர், பூஜா ஹெக்டே என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் லோகேஷ் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், "அஜித் சார் நடிப்பில் கண்டிப்பாக திரைப்படம் இயக்குவேன், அது 100 சதவீதம் உறுதி. அவரது ஆக்சன் முகத்தை என்னுடைய படத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை உள்ளது. தற்போது அஜித் குமார் கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். நானும் என் அடுத்தடுத்த படங்களிலும் பரபரப்பாக இருப்பதால் கொஞ்சம் தள்ளிப் போகிறது. ஆனால், எனக்கும் அவருக்கும் நேரம் அமையும் போது கண்டிப்பாக நான் அவர் படத்தை இயக்குவேன்" என்று தெரிவித்துள்ளார்.