Oct 18, 2025
Thisaigal NewsYouTube
இளம் வயதிலேயே இயக்குநர் அவதாரம் எடுக்கும் கென் கருணாஸ்
சினிமா

இளம் வயதிலேயே இயக்குநர் அவதாரம் எடுக்கும் கென் கருணாஸ்

Share:

2019 ஆம் ஆண்டு வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படத்தில் தனுஷின் இளைய மகனாக நடித்து இருந்தார் கென் கருணாஸ். இவரது நடிப்பு பலராலும் பாராட்டு பெற்றது. அதைத் தொடர்ந்து வாத்தி மற்றும் விடுதலையில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தைப் பெற்றார்.

தற்போது கென் கருணாஸ் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்கும் படத்தில் இவரே கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இது ஒரு பள்ளிக் கூட பின்னணியில் நடக்கும் கதைக்களமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இப்படத்தில் மலையாள நடிகரான சுராஜ் வெஞ்சரமூடு முக்கிய கதாப்பாத்திரத்திலும், ஸ்ரீதேவி அப்பல்லா, அனிஷ்மா என மொத்தம் 3 கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News