Oct 19, 2025
Thisaigal NewsYouTube
2 கதாநாயகர்கள் கதை... தயாரிப்பாளராகும் ரவி மோகன்
சினிமா

2 கதாநாயகர்கள் கதை... தயாரிப்பாளராகும் ரவி மோகன்

Share:

நடிகர் ரவி மோகன் தற்போது தொடர்ச்சியாக படங்களில் நடித்து வரும் நிலையில், ஒரு படத்தை அவரே தயாரிக்க இருப்பதாகவும், அந்த படம் இரண்டு ஹீரோ கதை எனக் கூறப்படுகிறது. அவர் ஒரு ஹீரோவாகவும், இன்னொரு ஹீரோவாக மாஸ் நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாகவும் அறியப்படுகிறது.

நடிகர் ரவி மோகன் தற்போது ’கராத்தே பாபு’, ’ஜெனி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ‘பராசக்தி’ படத்திலும் ஒரு முக்கிய இடத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ஒரு திரைப்படத்தை ஜெயம் ரவியே தயாரிக்க இருப்பதாகவும், அந்த படத்தை கார்த்திக் யோகி என்பவர் இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இவர் ஏற்கனவே சந்தானம் நடித்த ’வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற படத்தை இயக்கியவர்.

இந்த படம் இரண்டு ஹீரோ கதை என்றும் ஜெயம் ரவி ஒரு ஹீரோவாகவும், இன்னொரு ஹீரோவாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.

Related News