Nov 23, 2025
Thisaigal NewsYouTube
சூர்யவம்சம் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர்
சினிமா

சூர்யவம்சம் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர்

Share:

விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் 1997ஆம் ஆண்டு வெளிவந்த படம் சூர்யவம்சம். இப்படத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

மேலும் தேவயானி, ராதிகா சரத்குமார், ஆனந்த்ராஜ், மணிவண்ணன், சுந்தர்ராஜன் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் மணிவண்ணன்.

ஆனால், முதன் முதலில் இவருடைய கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது நடிகர் கவுண்டமணி தான் என படத்தின் இயக்குநர் விக்ரமன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

“சூர்யவம்சம் கதை பண்ணும்போது எனக்கு முதலில் கவுண்டமணி சாரைத் தான் மணிவண்ணன் சார் கதாப்பாத்திரத்தில் போடுறதா இருந்தேன். அவருடைய சூழ்நிலை அப்போ ஒத்து வரல, ஏன்னா உள்ளத்தை அள்ளித்தா படம் அப்போ வெளியாகி பெரிய வெற்றி. கவுண்டமணி சார் ரொம்ப பரபரப்பா ஆகிட்டாரு” என விக்ரமன் கூறியுள்ளார். 

Related News