இந்தியா, மே 15-
இந்திய சினிமாவை பொறுத்த வரை 70 வயதை கடந்தும், இன்றளவும் ஹீரோவாக மட்டுமே நடித்து வரும் வெகு சில நடிகர்களில் ஒருவர் தான் மம்மூட்டி.
கேரளாவில் பிறந்த நடிகர் மம்முட்டிக்கு வயது 73, கடந்த 1971 ஆம் ஆண்டு வெளியான ஒரு மலையாள திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதன் பிறகு மெல்ல மெல்ல மலையாள திரை உலகை ஆளத்தொடங்கினர் மம்மூட்டி என்றால் அது மிகையல்ல.

1980களின் தொடக்கத்தில் இருந்து 1990ம் ஆண்டு முற்பாதி வரை மம்மூட்டி மம்மூட்டி 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக 1983 ஆம் ஆண்டு ஒரே வருடத்தில் 34 திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்த ஒரு நடிகர் தான் மம்மூட்டி.
அவர் மலையாள திரை உலகில் முன்னணி நாயகனாக வளம் வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தான் 1990 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "மௌனம் சம்மதம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட் உலகில் களம் இறங்கினார். மலையாளம், தமிழ் என்று பாகுபாடு இன்றி இரு மொழி ரசிகர்களும் இவரை வரவேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க உள்ள ஒரு படத்தில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்க மம்மூட்டியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அந்த படத்தை மம்மூட்டி அவர்களே தயாரிக்க உள்ளதாகவும் தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.