Jan 16, 2026
Thisaigal NewsYouTube
விஜய் கட்சியில் சீட் கேட்ட கீர்த்தி சுரேஷ்… !
சினிமா

விஜய் கட்சியில் சீட் கேட்ட கீர்த்தி சுரேஷ்… !

Share:

இந்தியா, ஆகஸ்ட் 03-

கேஜிஎப், காந்தாரா உள்பட சூப்பர் ஹிட் படங்களை எடுத்த ஹோம்பாலே பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ’ரகு தாத்தா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதையடுத்து படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்துகொண்டு வருகிறார். அப்போது அவர் விஜய் உடனான உரையாடல் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.

அதில் “சமீபத்தில் விஜய் சாரை ஒரு ஷூட்டிங்கில் சந்தித்தேன். அப்போது அவர் நடிக்கும் கடைசி படம் பற்றிய தகவல் வெளிவந்திருந்தது. எப்படி சார் உணர்கிறீர்கள் என்று கேட்டேன். கடைசி படம்னு சொல்லும்போது ஒரு மாதிரி இருந்தது. ஆனா சந்தோஷம்தான் என்று சொன்னார். நான் ஜாலியாக உங்க கட்சி பேர் நல்லா இருக்கு சார் , எனக்கொரு சீட் கொடுங்க எனக் கேட்டேன்” எனக் கூறியுள்ளார்.

Related News