Oct 20, 2025
Thisaigal NewsYouTube
போட்டியின்றி சிங்கம் போல் சிங்கிளாக ரிலீஸ் ஆகிறது விஜய் சேதுபதியின் 50-வது படம் ‘மகாராஜா’ - ரிலீஸ் தேதி இதோ
சினிமா

போட்டியின்றி சிங்கம் போல் சிங்கிளாக ரிலீஸ் ஆகிறது விஜய் சேதுபதியின் 50-வது படம் ‘மகாராஜா’ - ரிலீஸ் தேதி இதோ

Share:

இந்தியா, ஜூன் 04-

குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திர வேடம், ஹீரோ என எந்தவித ரோலாக இருந்தாலும் அதை அசால்டாக செய்து அசத்தி வருபவர் விஜய் சேதுபதி. கடந்த சில ஆண்டுகளாக இவர் ஹீரோவாக நடித்த படங்களை காட்டிலும் வில்லனாக நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றியை பெற்று வந்ததால், அவரை படிப்படியாக வில்லன் நடிகராகவே மாற்றிவிட்டனர். ஒரு கட்டத்தில் உஷாரான விஜய் சேதுபதி இனிமேல் வில்லனாக நடிக்க மாட்டேன் என அதிரடியாக அறிவித்தார்.

அதன்பின்னர் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அவர் நடிப்பில் தற்போது மகாராஜா என்கிற திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தை நித்திலன் சாமிநாதன் இயக்கி இருக்கிறார். இவர் குரங்கு பொம்மை படத்தை இயக்கியவர். நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படம் இதுவாகும். அணீஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதி உடன் அனுராக் கஷ்யப், நட்டி நட்ராஜ், மம்தா மோகன் தாஸ், அபிராமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில், மகாராஜா திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்து இருக்கிறது. சிறப்பு போஸ்டருடன் வந்துள்ள அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

அதன்படி மகாராஜா திரைப்படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். முன்னதாக அன்றைய தினத்தில் தனுஷின் 50வது படமான ராயன் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் அப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதால் வேறு எந்த பெரிய படமும் மகாராஜா படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆகாத நிலை உள்ளது. இதனால் மகாராஜா படம் சோலோவாக ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளது.

Related News