லியோ திரைப்படம் குடும்ப கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என ஒரு சிலர் பேசி வருகின்றனர். என்னவென்றால் சஞ்சய் தத்தின் மகனாக விஜய் நடிக்க , சஞ்சய் தத்தின் சகோதரராக அர்ஜுன் நடிக்கின்றார். மேலும் மடோனா செபாஸ்டியன் விஜய்யின் தங்கையாகவும் , மன்சூர் அலி காணும் விஜய்யின் உறவினராகவும் நடிக்கிறாராம். இந்நிலையில் இந்த குடும்பத்திற்குள் ஏற்படும் பிரச்சனை தான் லியோ படத்தின் கதைக்கரு என ஒரு தகவல் வந்துள்ளது. ஆனால் இதில் எந்தளவிற்கு உண்மை உள்ளது என தெரியவில்லை. இருந்தாலும் ஒரு கேங்ஸ்டர் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனை தான் லியோ படத்தின் கதை என சிலர் அடித்து கூறுகின்றனர். எனவே இது உண்மையா இல்லையா என்பது படம் வெளியான பிறகு தான் தெரியவரும்.
