Oct 20, 2025
Thisaigal NewsYouTube
கதையின் நாயகனாக சார்லி! உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் வெளியாகியுள்ள ஃபைண்டர்
சினிமா

கதையின் நாயகனாக சார்லி! உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் வெளியாகியுள்ள ஃபைண்டர்

Share:

இந்தியா, ஏப்ரல் 22-

பரப்பரப்பான திரில்லராக உருவாகியிருக்கும் “ஃபைண்டர்” திரைப்படம் ஏப்ரல் 20 முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் இப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் தயாரிக்க, நடிகர் சார்லி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கும் “ஃபைண்டர்” திரைப்படம் இன்று ஏப்ரல் 20 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

புதுமுகங்களின் முயற்சியில் உருவாகியிருக்கும் இப்படத்தில், தமிழின் முண்ணனி குணச்சித்திர நடிகரான சார்லி முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு செல்லும் சார்லி தன் குடும்பத்தோடு இணையத் துடிப்பதை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

சார்லியின் வழக்கை கையாளும் நாயகன் குற்றத்தின் பின்னணியை எப்படி உடைத்து சார்லியை காப்பாற்றுகிறார் என்பதாக பரபரப்பான காட்சிகளுடன், அதிரடி திருப்பங்களுடனும், ஒரு அட்டகாசமான திரில்லர் அனுபவத்தை இந்தப்படம் தருகிறது.

படத்தில் ஏறத்தாழ அனைவரும் புதுமுகங்கள் என்றாலும், நடிப்பு, தொழில்நுட்பம் அனைத்திலும் கச்சிதமாக உருவாக்கப்பட்டிருக்கும் விதத்தில் ரசிகர்களிடையே பாராட்டுக்களை குவித்து வருகிறது. முக்கியமாக சார்லி, செண்ட்ராயன், பாத்திரங்களில் அவர்களின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இப்படத்தை இயக்கி நாயகனாக நடித்திருக்கும் இயக்குநர் வினோத் ராஜேந்திரன் ஒரு புதுமுகம் போல் இல்லாமல் தேர்ந்த நடிப்பை தந்திருக்கிறார். சிறு பட்ஜட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களை கவர்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களை கண்டுபிடித்து அவர்களை நிரபராதிகள் என நிரூபித்து அதற்கு அவர்களுக்கு அரசாங்கம் தரும் இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவருக்கு பெற்றுத்தரும் நிறுவனத்தை பற்றிய உண்மை கதையின் அடிப்படையில், சென்னைப் பின்னணியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.

Related News