Oct 18, 2025
Thisaigal NewsYouTube
கூலி படத்தில் நடித்ததே தவறு என அமீர் கான் சொன்னாரா?
சினிமா

கூலி படத்தில் நடித்ததே தவறு என அமீர் கான் சொன்னாரா?

Share:

கூலி படத்தில் ஹிந்தி நடிகர் அமீர் கான் கெஸ்ட் ரோலில் நடித்து இருந்தார். ஆனால் அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை, மாறாக விமர்சனங்கள் தான் வந்தது. அதனால் அமீர் கான் அடுத்து லோகேஷ் உடன் கூட்டணி சேர இருந்த படமும் கைவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமீர் கான் தான் கூலி படத்தில் நடித்ததே மிகப் பெரிய தவறு என பேசியதாக ஒரு செய்தி பரவி வருகிறது.

‘ரஜினிக்காகத் தான் நான் நடித்தேன், என் ரோல் அப்படி மோசமாக எழுதப்பட்டு இருந்தது’ என அமீர் கான் சொன்னதாக இணையத்தில் செய்தி பரவுகிறது.

ஆனால் அமீர் கான் அப்படி ஒரு பேட்டியே கொடுக்கவில்லையாம். வழக்கம போல பொய் செய்தி பரப்புபவர்கள் இப்படி வதந்தியை பரப்பி விட்டிருக்கின்றனர்.

Related News