இந்த வாரம் ஜியோ சினிமா, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் நெட்ஃபிளிக்ஸ் இல் அதிகம் பார்க்கப்பட்ட வெப் தொடர் மற்றும் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சி கண்டுள்ளன. அதனால் வாரந்தோறும் ஓடிடியில் படங்களும் வெப் தொடர்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் கடந்த வாரம் ஓடிடியில் வெளிவந்த படங்கள் மற்றும் வெப் தொடர்களில் அதிக பார்வைகளை பெற்ற டாப் 10 வெப் தொடர்கள் மற்றும் படங்கள் பற்றி ஓர்மேக்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலை பார்க்கலாம்.

ஜியோ சினிமாவில் ஆஷா நெகியின் ஹனிமூன் போட்டோகிராஃபர் என்கிற வெப் தொடர் தான் அதிகம் பார்க்கப்பட்ட வெப் தொடர்களின் பட்டியலில் 10ம் இடத்தை பிடித்துள்ளது. ஜியோ சினிமாவில் வெளிவந்த இந்த வெப் தொடர் 14 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.

9. செலினா கோமஸின் ஒன்லி மர்டர் வெப் தொடர் இந்த பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான இந்த வெப் தொடர் 16 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.

அமேசான் எம்.எக்ஸ் பிளேயரில் ஷாந்தனு மகேஸ்வரியின் வெப் தொடரான இஷ்க் இன் தி ஏர் 2 (Ishq In The Air) நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தத் வெப் தொடர் 17 லட்சம் பார்வைகளுடன் 8ம் இடத்தை பிடித்துள்ளது.

7. பரேஷ் ராவலின் காமெடித் திரைப்படம் Jo Tera Hai Woh Mera Hai ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் ஸ்டிரீம் ஆகி வருகிறது. இதுவரை 19 லட்சம் பார்வைகளை பெற்றுள்ள இந்த வெப் தொடர் 7ம் இடத்தில் உள்ளது.