Oct 19, 2025
Thisaigal NewsYouTube
தற்கொலை என்பது சமூகத்தின் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு- வைரமுத்து
சினிமா

தற்கொலை என்பது சமூகத்தின் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு- வைரமுத்து

Share:

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா நேற்று அதிகாலை 3 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். 12-ம் வகுப்பு படித்து வந்த மீரா கடந்த ஒரு வருடமாக மன அழுத்தத்திற்காக சிகிச்சை எடுத்து வந்ததாகவும், மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துக் கொண்டதாகவும் தகவல் வெளியானது. திரைப்பிரபலங்கள் பலர் மீராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது உடல் இன்று கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து, விஜய் ஆண்டனி மகள் மீராவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "கொலை என்பது

மனிதன் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு தற்கொலை என்பது சமூகத்தின் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு விஜய் ஆண்டனி மகளின் தற்கொலை சமூகத்தை எந்தப் புள்ளியில் எதிர்க்கிறது என்பதைக் கண்டறிந்து களைய வேண்டும் ஒரு பூ கிளையிலேயே தூக்கிட்டுக் கொள்வது எத்துணை பெரிய சோகம் வருந்துகிறேன் ஒரு குடும்பத்தின் சோகத்தைப் பங்கிட்டு என் தோளிலும் ஏற்றிக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளா

Related News