நடிகர் அஜித் நடிப்பில் இரு திரைப்படங்கள் வெளியானது. விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு படங்கள் வெளிவந்த நிலையில், விடாமுயற்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதன் பின் வெளிவந்த குட் பேட் அக்லி படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
இப்படம் அஜித்தின் கெரியர் பெஸ்ட் ஆக மாறியுள்ளது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் இணைந்திருக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இப்படத்திற்கான அறிவிப்பும் இந்த மாதம் இறுதிக்குள் வெளிவரும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நடிகர் அஜித் நீண்ட நாட்களுக்கு பிறகு அளித்திருக்கும் பேட்டி தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
அதில், " இன்னும் இரண்டு மாதத்தில் ஏகே 64 படத்திற்கான பணிகளை ஆரம்பிக்க உள்ளேன். வரும் ஜனவரி மாதத்திற்குள் இந்த படத்திற்கான அறிவிப்புகள் வெளிவரும். நான் ஒரே நேரத்தில் சினிமாவிலும் கார் பந்தயத்திலும் ஈடுபட்டு வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.








