Oct 20, 2025
Thisaigal NewsYouTube
இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்ட ஆடியோ லாஞ்சுக்கு நாள் குறித்த இயக்குனர் ஷங்கர்
சினிமா

இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்ட ஆடியோ லாஞ்சுக்கு நாள் குறித்த இயக்குனர் ஷங்கர்

Share:

இந்தியா, ஏப்ரல் 29-

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா குறித்த மாஸ் அப்டேட் ஒன்று கசிந்துள்ளது.

கமல்ஹாசன் - இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் கடந்த 1996-ம் ஆண்டு திரைக்கு வந்த திரைப்படம் இந்தியன். இதில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி இருந்தார். அதிலும் இந்தியன் தாத்தாவாக அவர் எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சிகள் வேறலெவலில் வரவேற்பை பெற்றன. இப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். மேலும் சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இந்த நிலையில், சுமார் 28 ஆண்டுகள் கழித்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குனர் ஷங்கர். இப்படத்திலும் கமல்ஹாசன் தான் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஆனால் அவருடன் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பல்வேறு திறமை வாய்ந்த நடிகர், நடிகைகள் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

இயக்குனர் ஷங்கர் தன்னுடைய கெரியரில் இதுவரை ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் உடன் மட்டுமே இணைந்து பணியாற்றி இருக்கும் நிலையில், இந்தியன் 2 படத்தின் மூலம் முதன்முறையாக அனிருத் உடன் இணைந்திருக்கிறார். இந்த கூட்டணியில் உருவாகும் பாடல்களுக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பும் உள்ளது. இந்த நிலையில், இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து சூப்பரான அப்டேட் ஒன்று கசிந்துள்ளது.

அதன்படி இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா வருகிற மே மாதம் 16-ந் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விழாவில் இசையமைப்பாளர் அனிருத், பாடல்களை நேரடியாக பர்பார்ம் செய்துகாட்ட உள்ளாராம். அதுமட்டுமின்றி இதில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல ஜாம்பவான்கள் கலந்துகொள்ள உள்ளார்களாம். அதோடு வருகிற மே முதல் வாரத்தில் இந்தியன் 2 படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News