Oct 19, 2025
Thisaigal NewsYouTube
கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுடன் அனிருத்துக்குத் திருமணமா?
சினிமா

கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுடன் அனிருத்துக்குத் திருமணமா?

Share:

கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் இசையமைப்பாளர் அனிருத்தை திருமணம் செய்யவுள்ளார் என்ற தகவல் இணையத்தில் வைரலாக அண்மையில் பரவியிருந்தது. 34 வயதான அனிருத்தும் 32 வயதான காவ்யா மாறனும் ஒரு வருடத்திற்கும் மேலாகப் பழகி செய்து வருவதாகவும், தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் வெளியான ஒரு வைரல் பதிவைத் தொடர்ந்து இணையத்தில் இந்தத் தகவல் தீப் போல பரவியது.

இந்நிலையில், தனக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது என்று பரவியுள்ள தகவலை அனிருத் மறுத்துள்ளார். அத்தகவல் உண்மையில்லை. அனைவரும் பொறுமையுடன் இருக்க வேண்டும். வீணே வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என அவர் தனது எக்ஸ் பதிவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News