Oct 19, 2025
Thisaigal NewsYouTube
பிரபுவின் மகளை கரம்பிடித்த ஆதிக் ரவிச்சந்திரன்.. நேரில் வாழ்த்து தெரிவித்த விஷால்
சினிமா

பிரபுவின் மகளை கரம்பிடித்த ஆதிக் ரவிச்சந்திரன்.. நேரில் வாழ்த்து தெரிவித்த விஷால்

Share:

கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான 'திரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன்.

தொடர்ந்து சிம்புவை வைத்து 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான 'மார்க் ஆண்டனி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமல்லாமல் இப்படம் ரூ.100 கோடி கிளப்பிலும் இணைந்தது.

வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவரான ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் பிரபல நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக செய்தி பரவி வந்தது.

Related News