ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் வருகிறார்.
இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது.
படத்தின் டிரெய்லரில் கூட கிரிக்கெட் போட்டி மத மோதலாக உருவெடுப்பதையும், அப்போது ரஜினிகாந்த் அறிமுகமாகி 'விளையாட்டுல மதத்தை கலந்துருக்கீங்க.
குழந்தைகள் மனசுல கூட விஷத்தை விதைச்சிருக்கீங்க. தப்பா போகுது' என்று ஆவேசமாக பேசும் வசனம் கவனம் ஈர்த்தது.
படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.
இந்த படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நடித்துள்ளார். அவரது பிறந்தநாளையொட்டி, 'லால் சலாம்' படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.