Jan 16, 2026
Thisaigal NewsYouTube
இயக்குநர்கள், உதவி இயக்குநர்களின் வாரிசுகளுக்காக.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் முன்னெடுப்பு!
சினிமா

இயக்குநர்கள், உதவி இயக்குநர்களின் வாரிசுகளுக்காக.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் முன்னெடுப்பு!

Share:

கல்வி உதவி தேவைப்படும் இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் வாரிசுகளுக்கு வருடம் தோறும் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

’3’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் , ’வை ராஜா வை’, ’லால் சலாம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர், தற்போது, கல்வி உதவி தேவைப்படும் இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் வாரிசுகளுக்கு வருடம் தோறும் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அதன்படி 2024ஆம் ஆண்டுக்கான நிதியை ஐஸ்வர்யா, சங்கத் தலைவர் ஆர்.வி. உதயகுமாரிடம் வழங்க அவருடன் இணைந்து செயலாளர் பேரரசு, பொருளாளர் சரண், பெப்ஸி தலைவர் ஆர்.கே. செல்வமணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். முறையான வருமானம் இன்றி தவிக்கும் இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் குழந்தைகளுக்கு உதவ இந்த முன்னெடுப்பை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்துள்ளார்.

Related News