தமிழில் பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் லிங்குசாமி. அவர் தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலமாக தயாரித்த சில படங்கள் பெரிய தோல்வி அடைந்ததால் படம் தயாரிப்பதையே நிறுத்தி விட்டார்.
இந்நிலையில் செக் பவுன்ஸ் ஆன வழக்கில் லிங்குசாமிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது என்றும், அவர் விரைவில் கைதாக இருக்கிறார் என்றும் செய்தி பரவி வருகிறது.
அது பற்றி லிங்குசாமி விளக்கம் கொடுத்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
என் மீதும், என் நிறுவனத்தின் மீது Paceman Finance நிறுவனம் காசோலை மாற்று முறை ஆவணச் சட்டம் 138 -ன் கீழ் தாக்கல் செய்தனர். அவ்வழக்கில் இன்று பதினொன்பது பெருநகர குற்றவியல் நீதிமன்றம் எங்களுக்குச் எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
மேலும், நாங்கள் மேல்முறையீடு செய்வதற்கு 30 நாள் கால அவகாசம் வழங்கியுள்ளனர். நாங்கள் இதைச் சட்டப்படி மேல்முறையீடு செய்து எங்கள் மீதும் எங்களின் நிறுவனத்தின் மீதும் போடப்பட்ட பொய் வழக்கை சட்டப்படி மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்.
எங்கள் மீது கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொய்யான செய்தியைக் கூறி வருகிறார்கள். அப்படியான செய்தியை பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் யாரும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். எங்கள் மீது பரப்பப்படும் வதந்திகள் பொய்யானவை என்று கூறிக் கொள்கிறோம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.








