இந்தியா, ஜுன் 27-
பொதுவாக உச்ச நடிகர்களின் படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும். குறிப்பாக 25வது படம், 50வது படங்கள் பெரிய அளவில் எதிர்பார்ப்பக்கடும். ஆனால் இதுபோன்ற 50வது படங்கள் ஹீரோக்களுக்கு கை கொடுத்ததா என்றால் அது மிகப்பெரிய கேள்வி தான்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 50-வது படம் நான் வாழவைப்பேன். சிவாஜி கணேசன், பண்டரி பாய், கே.ஆர் விஜய் என்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் இந்த படம் உருவானது. ஆனால் இந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது. இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
உலகநாயகன் கமல்ஹாசன் சிறுவயதிலேயே சினிமாவில் நுழைந்துவிட்டதால், இவர் முன்னணி ஹீரோவாக மாறுவதற்கு முன்பே இவரின் 50-வது படம் வெளியாகிவிட்டது. கமலின் 50-வது படம் மூன்று முடிச்சு. ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீ தேவி ஆகியோர் நடிப்பில் வெளியான மூன்று முடிச்சு படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனால் இதில் கமல் கொஞ்சம் சீன்களில் தான் வருவார்.
விஜய்யின் 50-வது படம் சுறா. விஜய், தமன்னா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. விஜய்யின் கெரியரில் மோசமான விமர்சனங்களை பெற்றது.
ஆனால், விஜய் சேதுபதியின் 50-வது படம் சமீபத்தில் வெளியான மகாராஜா படம். இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்த நிலையில் வசூல் ரீதியிலும் வெற்றி படமாக இந்த படம் அமைந்துள்ளது. வ