Oct 20, 2025
Thisaigal NewsYouTube
சினிமா

நடிகர் விக்ரமின் ‘வீர தீர சூரன்: பாகம் 2’ திரைப்படம் மார்ச்சில் வெளியாகிறது…

Share:

தேசிய விருது பெற்ற நடிகர் விக்ரமின் புதிய படம் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விக்ரம் கடைசியாக பா.ரஞ்சித்தின் ‘தங்கலான்’ படத்தில் நடித்திருந்தார்.

அவர் சிறந்த உள்ளடக்கம் நிறைந்த திரைப்படங்களில் தங்கள் திறமையை நிரூபித்த இளம் திரைப்பட தயாரிப்பாளர்களுடன் சுவாரஸ்யமான படங்களை வெளியிட தயாராகி வருகிறார். அந்தப் பட்டியலில் முதலில் இடம்பிடித்த ‘சித்தா’' இயக்குனர் எஸ்.யு.அருண் குமார், விக்ரமுடன் சியான் 62 படத்திற்காக கைகோர்த்தார். அது பின்னர் வீர தீர சூரன்: பாகம் 2 எனப் பெயரிடப்பட்டது.

அப்படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. வீர தீர சூரன்: பாகம் 2 மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். அப்படம் எப்படத்தின் தொடர்ச்சியுமல்ல.

விக்ரம் தவிர, வீர தீர சூரன்: பாகம் 2 இல் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் பிரபல மலையாள நடிகரும் தேசிய விருது பெற்றவருமான சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் நடித்துள்ளனர். அவர் தமிழில் முதல் முறையாக அறிமுகமாகவிருக்கிறார்.

Related News