Oct 17, 2026
Thisaigal NewsYouTube

தமிழகத்தில் செம வசூல் வேட்டையில் ரஜினியின் வேட்டையன்... 2 நாள் முடிவில் எவ்வளவு வசூல்?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தமிழகத்தில் செம வசூல் வேட்டையில் ரஜினியின் வேட்டையன்... 2 நாள் முடிவில் எவ்வளவு வசூல்?

12 அக்டோபர் 2024-

வேட்டையன்

செப்டம்பர் மாதம் விஜய்யின் கோட் படம் வெளியாகி செம வசூல் வேட்டை நடத்தியிருந்தது.

அக்டோபர் மாதம் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினியின் வேட்டையன் படம் வெளியாகியுள்ளது.

கடந்த அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆன இப்படம் முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படத்தையும் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.

தமிழகம்

முன்பதிவிலேயே ரூ. 40 கோடி வரை படம் வசூலித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் ரிலீஸிற்கு பிறகும் வேட்டையன் செம வசூல் வேட்டை செய்து வருகிறது.

தமிழகத்தில் மட்டுமே 2 நாள் முடிவில் படம் ரூ. 41 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம். வேட்டையனின் வசூல் வேட்டை எப்படி இருக்கப்போகிறது என்பதை தினமும் நாம் பார்ப்போம்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →