Oct 20, 2025
Thisaigal NewsYouTube
மகிழ் திருமேனியிடம் சண்டை பாேட்ட த்ரிஷா!? விடாமுயற்சி ஷூட்டிங்கில் நடந்த சம்பவம்..
சினிமா

மகிழ் திருமேனியிடம் சண்டை பாேட்ட த்ரிஷா!? விடாமுயற்சி ஷூட்டிங்கில் நடந்த சம்பவம்..

Share:

இந்தியா, ஜூலை 18-

விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வருவதை தொடர்ந்து, படப்பிடிப்பு தளத்தில் த்ரிஷாவிற்கும் இயக்குநர் மகிழ் திருமேனிக்கும் சண்டை எழுந்ததாக கூறப்படுகிறது.

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக தமிழ் படங்களில் ஹீராேவாக நடித்து வரும் இவர், தற்போது விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கிள் பிசியாக இருக்கிறார். இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாவதற்கு காலதாமதம் ஆவதை ஒட்டி, இது குறித்த அதிர்ச்சிகர தகவல் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.

விடாமுயற்சி திரைப்படம்:

நடிகர் அஜித்குமார், துணிவு படத்திற்கு பிறகு கமிட்டான படம்தான் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்குவதாகவும், அஜித் ஹீரோவாக நடிப்பதாகவும் அறிவிப்பு வந்ததே அன்றி, அதையடுத்து படத்தின் டைட்டில் ரிலீஸ் செய்வதற்கும், யார் யார் நடிக்கின்றனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாவதற்கும் பல மாதங்கள் எடுத்தது. இந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்தது. அதில் அஜித்குமார், அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து நடிகர் அஜித் பைக் எடுத்துக்கொண்டு இந்தியா டூர்-உலக டூர் சென்று விட, படப்பிடிப்பு தடைப்பட்டதாக கூறப்படுகிறது.

அஜித் தனது பயணத்தை எல்லாம் முடித்துக்கொண்டு வந்த பிறகும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவில்லை. இதையடுத்து, அஜித் சட்டென ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் கமிட்டானார். இந்த படத்தின் பணிகள் விறுவிறுவென ஹைதராபாத்தில் தொடங்கியது. ஷூட்டிங் ஆரம்பித்த சில நாட்களிலேயே தன் பங்கு காட்சிகளில் நடித்து முடித்துவிட்டார், நடிகர் அஜித். இதையடுத்து மீண்டும் அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கியது.

த்ரிஷா-மகிழ் திருமேனி சண்டை?

விடாமுயற்சி திரைப்படத்தில், அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து இதில் த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகள், அஜர்பைஜானில் படமாக்கப்பட்டு வருகின்றன. இதில் த்ரிஷா கலந்து கொண்டார். அப்போது, ஒரு காட்சியை படமாக்கியபோது த்ரிஷாவிற்கும் மகிழ் திருமேனிக்கும் வாக்குவாதம் நடந்ததாகவு இதையடுத்து த்ரிஷா கோபமாக ஷூட்டிங் நடந்த இடத்தில் இருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்னர், ஏற்கனவே படப்பிடிப்பு தாமதம் தொடர்பாக அஜித்திற்கும் மகிழ் திருமேனிக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அஜித்தை பொறுத்தவரை, தான் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் அதன் வேலைகள் 3 மாதத்திற்குள் முடிந்து விட வேண்டும் என்று நினைப்பதாகவும் ஆனால் மகிழ் திருமேனி அதற்கு மாறாக பல நாட்கள் ஷூட்டிங்கை இழுத்து செல்வதாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவரும் சரியாக பேசிக்கொள்வதில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது த்ரிஷா-மகிழ் திருமேனி இடையே சண்டை ஏற்பட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

படம் தள்ளிப்போகுமா?

விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் “வலிமை அப்டேட்” போல ரசிகர்கள் போவோர் வருவாேரிடம் “விடாமுயற்சி அப்டேட்” கேட்கும் கதையாகி விட்டது. இறுதியில், இந்த தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் பாேகிற போக்கை பார்த்தால் ரிலீஸ் இன்னும் தள்ளிப்பாேகும் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

Related News