Jan 16, 2026
Thisaigal NewsYouTube
வெற்றிமாறன் - சிம்பு படத்தில் நடிகராக நெல்சன் திலீப்குமார்
சினிமா

வெற்றிமாறன் - சிம்பு படத்தில் நடிகராக நெல்சன் திலீப்குமார்

Share:

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிதாக உருவாகி வரும் திரைப்படத்தில் சிம்பு ஹீரோவாக நடித்து வருகிறார். விடுதலை 2 படத்தைத் தொடர்ந்து வாடிவாசல் படம் எடுப்பார் என எதிர்பார்த்த நிலையில், தற்போது வாடிவாசல் படம் கைவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளி வரவில்லை.

வாடிவாசல் படம் தாமதமாகும் நிலையில், அதற்கு பதிலாக கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் வேறொரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார் வெற்றிமாறன். அப்படத்தில்தான் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது. சுவாரஸ்யமாக இப்படத்தின் மூலம் இயக்குநர் நெல்சன் நடிகராக அறிமுகமாவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் நெல்சன். இவர் இயக்கத்தில் தற்போது ஜெயிலர் 2 உருவாகி வரும் நிலையில், வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் இந்த புதிய படத்தில் நடிகராக அறிமுகமாகிறாராம். படப்பிடிப்புத் தளத்தில் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related News