Oct 20, 2025
Thisaigal NewsYouTube
‘தக் லைஃப்' படத்திற்குப் பின் மணிரத்னம் இயக்கும் படம்
சினிமா

‘தக் லைஃப்' படத்திற்குப் பின் மணிரத்னம் இயக்கும் படம்

Share:

பிரபல இயக்குனர் மணிரத்னம் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்த 'தக் லைஃப்’ படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில், இந்த படம் ஜூன் மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் விளம்பரப் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளன.

இந்த நிலையில், 'தக் லைஃப்’ படம் வெளியானவுடன் அடுத்த சில மாதங்களிலேயே மணிரத்னம் அடுத்த படத்தைத்க் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக சிம்பு நடிக்க இருப்பதாக கோலிவுட் திரை உலக வட்டாரங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே லைக்கா நிறுவனத்தில் தயாரிப்பில் உருவான ’பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களையும் மணிரத்னம் தான் இயக்கினார் என்பதும், இந்த இரண்டு படங்களால் லைக்கா நிறுவனத்திற்கு நல்ல லாபம் கிடைத்த நிலையில் மீண்டும் லைக்கா மற்றும் மணிரத்னம் இணைகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

’செக்க சிவந்த வானம்’ படத்தில் மணிரத்னம் மற்றும் சிம்பு முதன் முதலாக இணைந்த நிலையில், அதனை அடுத்து 'தக் லைஃப்’ படத்திலும் இருவரும் இணைந்து பணிபுரிந்தனர். தற்போது மூன்றாவது முறையாக மணிரத்னம்–சிம்பு கூட்டணியில் ஒரு படம் உருவாக இருப்பதாக கூறப்படுவது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிம்பு ஏற்கனவே மூன்று படங்களில் ஒப்பந்தமாகி ஆகி உள்ள நிலையில், இந்த படம் அதற்கு முந்துமா அல்லது தாமதம் ஆகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Related News