தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பேரளவில் வெற்றி பெற்ற திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.
பொன்ராம் இயக்கத்தில் கிராமத்து கதைக்களத்தில் வெளியாகி ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட படம். 2013ம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட். சிவகார்த்திகேயன்-சூரி கூட்டணி, காதல் காட்சிகள், டி.இமான் இசையில் ஹிட் பாடல்கள் என எல்லாமே படத்தில் சிறப்பாக அமைந்தது.
இப்போது பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன்-சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கொம்பு சீவி என்ற படம் வெளியாகி இருந்தது. அண்மையில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பொன்ராமிடம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் 2ம் பாகம் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு அவர், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் 2ம் பாகத்தை நிச்சயமாக எடுப்பேன். அடுத்த கனவு அப்படம் தான், எனக்கு சவாலான திட்டம் அது. அப்படத்தை எடுக்க முடியாது என பலர் கூறுகின்றனர், எடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார்.








