தமிழ் சினிமாவில் பல பிரச்சனைகளை சந்தித்தாலும் அதைத் தள்ளி வைத்து விட்டு தனது பயணத்தில் கவனம் செலுத்தி வருபவர் நடிகர் சிம்பு.
இவர் சந்திக்காத பிரச்சனை இல்லை, சர்ச்சை இல்லை, எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். கொரோனா காலத்தைப் பயன்படுத்தி தனது உடல் எடையைக் குறைத்து ஆளே மாறிய சிம்பு மாநாடு படம் நடிக்கத் தொடங்கி அடுத்தடுத்து நிறைய படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
தற்போது சிம்புவின் புதிய படம் குறித்த தகவல் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதாவது நடிகர் சிம்பு-வெற்றிமாறனுடன் கூட்டணி அமைத்து தனது 49வது படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படம் வடசென்னை 2 இல்லை என வெற்றிமாறன் கூறினாலும், தனுஷின் வடசென்னை பட சாயல் அதிகம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போது இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் நடிகை குறித்து ஒரு தகவல் வலம் வருகிறது. அதாவது இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளாராம்.