Oct 19, 2025
Thisaigal NewsYouTube
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வாழ்க்கை திரைப்படமாகிறது
சினிமா

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வாழ்க்கை திரைப்படமாகிறது

Share:

கபில்தேவ், சச்சின் தெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, மேரிகோம், பி.வி.சிந்து, சாய்னா, மிதாலி ராஜ் போன்ற இந்திய விளையாட்டு வீரர்-வீராங்கனைகளின் வாழ்க்கை திரைப்படமாகி இருக்கிறது.

அந்த வகையில் பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வாழ்க்கையும் படமாகிறது. கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த முயற்சி தற்போது மீண்டும் தீவிரமாகி இருக்கிறது. அவரது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தீபிகா படுகோனே, பரினிதி சோப்ரா ஆகியோரை சானியா மிர்சா பரிந்துரைத்திருந்தார். தனது வாழ்க்கை வரலாறு படமாவது குறித்து சானியா மிர்சா மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன், இந்த படத்தில் அக்ஷய்குமாருடன் நடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டென்னிஸ் விளையாட்டில் இந்தியா சார்பில் பல்வேறு பட்டங்களை வென்றுள்ள சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை காதலித்து மணந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தார். 2023-ம் ஆண்டில் அவர் டென்னிசில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News