Dec 12, 2025
Thisaigal NewsYouTube
படையப்பா படம் குறித்து ரஜினி
சினிமா

படையப்பா படம் குறித்து ரஜினி

Share:

படையப்பா படத்தை பற்றிய பல ரகசியங்களை ரஜினி தற்போது கூறி இருக்கிறார். வரும் டிசம்பர் 12ம் தேதி ரஜினி பிறந்தநாள் சிறப்பாக படையப்பா மீண்டும் வெளியாகிறது. அது பற்றி தற்போது ரஜினி பேட்டி அளித்திருக்கிறார்.

படையப்பா படத்தின் மூலக்கதை என்னுடையது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் வரும் நந்தினி கதாபாத்திரத்தை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அப்படி யோசித்தது தான் படையப்பா கதை. இந்தப் படத்தை நானே தான் தயாரித்தேன். நண்பரின் பெயரைப் போட்டிருந்தாலும் அதை தயாரித்தது நான் தான்.

ஜெயலலிதாவை வைத்து தான் நீலாம்பரி கதாபாத்திரம் எழுதப்பட்டதாக அப்போது வதந்தி பரப்பினார்கள். படையப்பா வெளியான போது ஜெயலலிதாவே படம் பார்க்க வேண்டும் என சொன்னார். போயஸ் கார்டன் தியேட்டரில் அவர் படம் பார்த்து பிடித்து இருந்தது என சொன்னதாக நான் கேள்விப்பட்டேன்" என ரஜினி கூறி இருக்கிறார்.

முதலில் நீலாம்பரி கதாப்பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் தான் சரியாக இருப்பார் என நான் நினைத்தேன். அவருக்காக 3-4 மாசம் சுற்றினோம். நடிக்கிறேன் என அவர் சொல்லவில்லை. அப்படி உறுதியாகச் சொல்லி இருந்தால் ஒன்று அல்லது இரண்டு வருடம் கூட காத்திருந்திருப்பேன்.

ஐஸ்வர்யா ராய்க்கு நடிக்க விருப்பம் இல்லை என்றதும் ஸ்ரீதேவி, மாதுரி தீக்ஷித் போன்ற பல பெயர்கள் சொன்னார்கள். ஆனால் அவர்களிடம் அந்தத் ஈறூஆளாஈ இல்லை, ஒரு திமிர், ஆணவம் அவர்களிடம் தெரியவில்லை. அதன் பிறகு தான் ரம்யா கிருஷ்ணன் பெயரை கேஎஸ் ரவிகுமார் சொன்னார்.

ஆரம்பத்தில் எனக்கு சரி எனத் தோன்றவில்லை. ரம்யா கிருஷ்ணன் இன்னும் கொஞ்சம் எடை அதிகரித்தால் நிச்சயம் செட் ஆகும் என இயக்குனர் கூறினார். நீங்கள் உறுதியாக இருந்தால் ஓகே எனக் கூறி விட்டேன்" எனவும் ரஜினி கூறி இருக்கிறார்.  

Related News