Oct 17, 2025
Thisaigal NewsYouTube
அருந்ததி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அனுஷ்கா இல்லையா
சினிமா

அருந்ததி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அனுஷ்கா இல்லையா

Share:

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாகக் கொடிகட்டிப் பறந்தவர் அனுஷ்கா. தனி கதாநாயகியாகத் தனக்கென்று தனி மார்க்கெட்டை உருவாக்கினார்.

அதற்கு மிகவும் காரணமாக அமைந்த படம் என்றால், அது 'அருந்ததி' தான். கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் உருவான இப்படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து மனோரமா, சயாயி ஷிண்டே, கைகாலா சத்யநாராயணா ஆகியோர் நடித்திருந்தனர்.

சோனு சூட் வில்லனாக மிரட்டியிருப்பார். ஆனால், இப்படத்தில் அனுஷ்காவின் நடிப்பு பெரும் அளவில் பாராட்டைப் பெற்றது. இருப்பினும் இப்படத்தில் நடிக்க முதலில் அனுஷ்கா தேர்வாகவில்லையாம்.

இப்படத்தில் நடிக்க மம்தா மோகந்தாஸைத் தான் தயாரிப்பாளர்கள் முதலில் அணுகியிருந்தனர். அவர் விலகியதால் அனுஷ்கா அருந்ததி படத்தில் நடித்தார்.

Related News

அருந்ததி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அனுஷ்கா இல்லையா | Thisaigal News