இந்தியா, ஜுன் 29-
நடிகை நயன்தாரா, விஷ்ணு வரதன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நேசிப்பாயா' பட விழாவில் கலந்து கொண்டு அந்த படத்தின் போஸ்டரை லான்ச் செய்துள்ளார். இதுகுறித்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.
நடிகை நயன்தாரா - அஜித் நடித்த பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் விஷ்ணு வரதன். இவர் கடைசியாக கடந்த தமிழில் 2015-ஆம் ஆண்டு வெளியான யட்சன் படத்தை இயக்கிய நிலையில், பின்னர் பாலிவுட் பக்கம் சென்றார்.
சுமார் 9 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தமிழுக்கு வந்துள்ள இயக்குனர் விஷ்ணு வரதன், மறைந்த நடிகர் முரளியின் மகன் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மை கதாபத்திரங்களில் நடித்துள்ள ’நேசிப்பாயா’ என்ற அழகான அட்வென்ச்சர் காதல் கதையை இயக்கி உள்ளார்.
இந்த படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த, எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். இவர் ஆகாஷ் முரளியின் மாமனார் ஆவார். அதே போல் இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக ஆகாஷ் முரளியின் மனைவி, சினேகா பிரிட்டோ உள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க, விஷ்ணு வர்தன் மற்றும் நீலன் சேகர் ஆகியோர் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர். தொழில்நுட்பக் குழுவில் கேமரூன் எரிக் பிரைசன் ஒளிப்பதிவு செய்ய, ஓம் பிரகாஷ் கூடுதல் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஏ. ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடந்த நிலையில், இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அதே போல் தான் நடிக்கும் படங்களின் விழாக்களில் கூட கலந்து கொள்ளாத நயன்தாரா கலந்து கொண்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
இப்படத்தின் போஸ்டர் ஒன்றை லான்ச் செய்த நயன்தாரா, விழா மேடையில் பேசும்போது... பொதுவாக நான் எந்த படவிழாவில் கலந்து கொள்வதில்லை. ஆனால் இயக்குனர் விஷ்ணு வரதன் மற்றும் அனு வரதனை 10... 15 வருடங்களாகவே எனக்கு தெரியும். இது என் குடும்ப நிகழுவு போல் என உணர்வு பூர்வமாக பேசினார்.