Dec 19, 2025
Thisaigal NewsYouTube
எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அவதார் பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்
சினிமா

எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அவதார் பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்

Share:

அவதார் ஹாலிவுட் சினிமாவில் தயாராகி உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் கொண்டாடிய திரைப்படம்.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் திரைப்படம் தயாராகியுள்ளது. வரும் டிசம்பர் 19ம் தேதி வெளியாகவுள்ள இப்படம் அவதாரின் இறுதிப் பாகமாக இருக்கலாம் என்கின்றனர்.

இந்த நிலையில் படத்தின் புரொமோஷனுக்காக இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியுடன் ஜேம்ஸ் கேமரூன் வீடியோ காலில் உரையாடியுள்ளார்.

அப்போது ஜேம்ஸ் கேமரூன், ராஜமௌலி நீங்கள் எடுக்கும் வாரணாசி திரைப்படத்தில் புலிகளுடன் ஜாலியான காட்சிகள் இருந்தால் சொல்லுங்கள் நான் கலந்து கொள்கிறேன்.

உங்கள் படப்பிடிப்புக்கு வருகிறேன், ஒரு கேமரா கொடுங்கள், தோளில் சுமந்து காட்சிகளை எடுப்பேன். என்னை உங்களுடைய 2ம் யூனிட் இயக்குனர் என நினைத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

எஸ்.எஸ்.ராஜமௌலி-ஜேம்ஸ் கேமரூன் இந்த உரையாடல் ரசிகர்களிடம் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

Related News