Jan 16, 2026
Thisaigal NewsYouTube
நயன்தாராவின் செம்பருத்தி டீ பதிவு நீக்கம்! என்ன காரணம்?
சினிமா

நயன்தாராவின் செம்பருத்தி டீ பதிவு நீக்கம்! என்ன காரணம்?

Share:

சென்னை, ஆகஸ்ட் 01-

பிரபல நடிகை நயன்தாரா சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் செம்பருத்தி டீ குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் அவர் செம்பருத்தி டீ சர்க்கரை நோய், முகப்பரு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

இந்த பதிவுக்கு தீவிர எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைதளங்களில் ‘தி லிவர் டாக்’ என்ற பெயரில் பிரபலமான மருத்துவர் சிரியாக் அபி பிலிப்ஸ் நயன்தாராவின் இந்த பதிவை கண்டனம் செய்தார்.

அவர், செம்பருத்தி டீ சுவையானது என்று மட்டும் கூறியிருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால், அதன் மூலம் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், முகப்பரு, பாக்டீரியா தொற்றுக்கு எதிரானது போன்ற தவறான தகவல்களை பரப்பியுள்ளார் என்றும் குற்றம் சாட்டினார்.

இந்த விவாதத்திற்கு பிறகு நயன்தாரா தனது பதிவை நீக்கியுள்ளார். சமூக வலைதளங்களில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related News