சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் சிறப்பாக படையப்பா படம் மீண்டும் வெளியாகிறது. அந்தப் படம் பற்றிய நினைவுகளை ரஜினி பகிர்ந்து இருக்கும் பேட்டி தற்போது வெளியாகி இருக்கிறது.
படையப்பா தனது சொந்த கதை என்றும், அதற்கு திரைக்கதை எழுதி இயக்கியது மட்டும் தான் கே.எஸ்.ரவிக்குமார் என ரஜினி கூறி இருக்கிறார்.
"மேலும் படையப்பா 2ம் பாகம் பற்றியும் ரஜினி அறிவித்து இருக்கிறார். 2.0, ஜெயிலர் 2 படம் போல படையப்பா 2ம் பாகம் எடுக்க வேண்டும் எனத் தோன்றியது."
"அடுத்த ஜென்மத்திலாவது உன்னை பழிவாங்காமல் விட மாட்டேன் என நீலாம்பரி சொல்லி இருப்பார். அதனால் அதை வைத்து 'நீலாம்பரி - படையப்பா 2' என படம் எடுக்க தற்போது கதை விவாதித்துக் கொண்டிருக்கிறேன்" என ரஜினி தெரிவித்து உள்ளார்.








