Oct 19, 2025
Thisaigal NewsYouTube
அவமானப்படுத்தியவர்களுக்கு சாதனையால் பதிலடி கொடுத்த முத்துக்காளை
சினிமா

அவமானப்படுத்தியவர்களுக்கு சாதனையால் பதிலடி கொடுத்த முத்துக்காளை

Share:

ராஜபாளையத்தை சொந்த ஊராக கொண்ட நடிகர் முத்துக்காளை கராத்தேவில் பிளாக் பெல்ட் வென்றுள்ளார். சினிமா மீது இருந்த ஆர்வத்தால் சென்னை வந்த இவர் சில படங்களில்

ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றினார்.

கடந்த 1997-ம் ஆண்டு வெளியான 'பொன்மனம்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

பின்னர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். அதிலும், 'இரண்டு பேரும் செத்து செத்து விளையாடலாம்' போன்ற காமெடிகள் இன்றும் ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

இப்படி நகைச்சுவை நடிகராக வலம் வந்த முத்துக்காளை கடைசியாக 2021-ம் ஆண்டு வெளியான 'பேய் இருக்க பயமேன்' படத்தில் நடித்திருந்தார்.

58 வயதான நடிகர் முத்துக்காளை தற்போது இளங்கலை தமிழ் இலக்கியத்தில் (B.lit) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் வென்றுள்ளார் இது இவரது மூன்றாவது பட்டமாகும்.

Related News