அக்டோபர் 09-
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'சிறகடிக்க ஆசை' சீரியலின் நாயகன் வெற்றி வசந்த் ... தற்போது தன்னுடைய காதலி யார் என்பதை அறிவித்துள்ளது மட்டும் இன்றி, இந்த வாரத்தில் தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதையும் உறுதி செய்துள்ளார்.
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுக்குமே... ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக டாப் 5 TRP பட்டியலில் இடம்பெற்று, சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல், தற்போது வெற்றிகரமாக 500 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலை குமரன் என்பவர் இயக்க, வெற்றி வசந்த் ஹீரோவாக நடித்து வருகிறார்... ஹீரோயினாக கோமதி பிரியா நடித்து வருகிறார்.
வழக்கமான குடும்ப கதையை மையப்படுத்தி இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தாலும்... முத்து கதாபாத்திரத்தில் நடிக்கும் வெற்றி வசந்த் அடிக்கும் கவுண்டர்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் ஒரு ஜாடையில் நடிகர் விஜய் சேதுபதியோடு இருப்பது மட்டும் இன்றி, அவரை

போலவே நடிப்பதாகவும் ரசிகர்கள் அடிக்கடி கூறுவது உண்டு.
சமூக வலைதளத்தின் பக்கம் அவ்வப்போது வந்து செல்லும் வெற்றி வசந்த் ... தற்போது முதல் முறையாக தன்னுடைய காதலி யார் என்பதை அறிவித்துள்ளார். அவரும் ஒரு சீரியல் ஹீரோயின் என்பது தான் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஷயம். ராஜா ராணி 2 சீரியலில் குணச்சித்திர வேடத்தில் நடித்து, பின்னர் 'பொன்னி' சீரியல் மூலம் ஹீரோயினாக மாறியவர் வைஷு. இவரை தான் வெற்றி வசந்த் காதலித்து வருவதாக அறிவித்துள்ளார்.