Jan 15, 2026
Thisaigal NewsYouTube
கதாநாயகர்களை உயர்த்தி பிடித்தால் கதாநாயகிகள் எப்படி வளர முடியும்? ஜோதிகா பேச்சு
சினிமா

கதாநாயகர்களை உயர்த்தி பிடித்தால் கதாநாயகிகள் எப்படி வளர முடியும்? ஜோதிகா பேச்சு

Share:

நட்சத்திர தம்பதிகளான சூர்யா-ஜோதிகாவுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜோதிகா, சமீபத்தில் வெளியான காதல்-தி கோர் படத்தில் மம்முட்டிக்கு மனைவியாக நடித்திருந்தார்.

படம் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் நேர்காணல் ஒன்றில் ஜோதிகா கூறியதாவது:-

சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் அமைவதற்காக அதிகமாக உழைக்கிறேன்.

கதாநாயகிகள் 10 சதவீதம் அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது. பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை ரசிகர்கள் விரும்ப வேண்டும்.

பெரிய கதாநாயகர்களை மட்டும் உயர்த்தி பிடித்தால் கதாநாயகிகள் எப்படி வளர முடியும்?

Related News