Oct 19, 2025
Thisaigal NewsYouTube
நடிகை ஊர்வசியின் மகள்  சினிமாவில் அறிமுகமாகிறார்
சினிமா

நடிகை ஊர்வசியின் மகள் சினிமாவில் அறிமுகமாகிறார்

Share:

கமல்ஹாசன் உட்பட பல பிரபலங்களுடன் நடித்த பன்முக நடிகையான ஊர்வசி, தனது மகளை சினிமாவில் அறிமுகம் செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

பாக்யராஜ் நடித்த, இயக்கிய 'முந்தானை முடிச்சு' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஊர்வசி. அதன் பின் ஏராளமான படங்களில் நாயகியாக நடித்தார் என்பதும், குறிப்பாக கமல்ஹாசனுடன் அவர் நடித்த 'மைக்கேல் மதன காமராஜன்' உட்பட பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகிய என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போதும் ஊர்வசி அம்மா கதாப்பாத்திரங்கள்க்ல் நடித்து வரும் நிலையில், அவரது மகள் தேஜாலட்சுமி, மலையாளத் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

'சுந்தரி அவள் ஸ்டெல்லா' என்ற டைட்டிலில் உருவாகும் படத்தில் தான் தேஜாலட்சுமி நாயகியாக அறிமுகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஊர்வசியின் மகள் நடிப்பதற்கு, ஊர்வசியின் முதல் கணவரும் சம்மதம் அளித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Related News