சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாரான கூலி திரைப்படம் வெளியாகி விட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாரான இப்படம் சுதந்திர தின சிறப்பாக கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி வெளியானது. இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் அமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் என பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் ரூ. 400 கோடி வசூலைத் தாண்டியுள்ளது.
இந்நிலையில் ரஜினி அடுத்து கூட்டணி அமைக்கப் போகும் ஓர் இயக்குனர் குறித்த தகவல் வந்துள்ளது. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பிரபாஸை வைத்து கல்கி 2898 AD என்ற படத்தை இயக்கி ரூ.1000 கோடி வசூல் கண்ட நாக் அஷ்வின் இயக்கத்தில் ரஜினி அடுத்து நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
நாக் அஸ்வின், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஒரு பகுதி கதையைக் கூற, அது ரஜினிக்கு பிடித்து போக முழு கதையுடன் வருமாறு கூறியுள்ளாராம்.