Oct 20, 2025
Thisaigal NewsYouTube
அட்லியுடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி
சினிமா

அட்லியுடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி

Share:

இந்தியா, ஏப்ரல் 03-

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கி வருபவர் அட்லி. இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தவர். ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் ஆர்யா – நயன்தாரா நடித்திருந்தனர். அதன்பின் விஜயை வைத்து 3 திரைப்படங்களை இயக்கி இருக்கிறார்.

தெறி, மெர்சல், பிகில் என விஜயை வைத்து அட்லி இயக்கிய எல்லா படங்களுமே விஜய் ரசிகர்களின் ஃபேவரைட் படங்களாக இப்போதும் இருக்கிறது. பிகில் திரைப்படத்திற்கு பின் பாலிவுட்டில் இருந்து ஷாருக்கான் அழைக்க அங்கே போனார் ஷாருக்கான். அப்படி உருவான படம்தான் ஜவான்.

இந்த படத்தில் ஷாருக்கான், நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் ஷாருக்கான் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதையடுத்து அட்லிக்கு பாலிவுட்டிலும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

ஆனால், அவரோ தெலுங்கு பட நடிகர் ராம் சரணை வைத்து ஒரு புடத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் சம்பளத்தோடு, படம் 500 கோடியை தாண்டி வசூலை பெற்றால் தனக்கு இத்தனை சதவீதம் ஷேர் கொடுக்க வேண்டும் எனவும் ஒப்பந்தம் போட்டிருக்கிறார் அட்லி.

ஒருபக்கம், ஒரு புதிய படத்தை தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கவுள்ளாராம். இவர் கடைசியாக சீதக்காதி படத்தை இயக்கி இருந்தார். கடந்த 5 வருடங்களாக படம் இயக்கவில்லை.

விஜய் சேதுபதிக்கு நல்ல துவக்கமாக அமைந்தது நடுவுல கொஞ்சம் காணோம் படம். அதனால், அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி என சொல்லப்படுகிறது.

Related News