கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு தொடர்பில் உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரச சுற்றுலா மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் போது விஜய்யிடம் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு வருவதுடன், விஜய்யிடம் 100 கேள்விகளை கேட்க சிபிஐ திட்டமிட்டுள்ளது.
விஜய்யிடம் மாலை 5 வரை விசாரணை நடத்தப்பட உள்ளதுடன், விஜய்யிடம் கேட்கப்படும் கேள்விகள், அவர் அளிக்கும் பதில்களை சிபிஐ அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாகப் பதிவுச் செய்து வருகின்றனர்.
கரூர் சம்பவம் தொடர்பில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கரூர் பிரசாரத்திற்குத் தாமதமாக வருகை தந்தமைக்கான காரணம், அனுமதி வழங்கப்பட்ட நேரம், கரூரில் என்ன நடந்தது என்பன தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.








