ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தவர் மலையாள நடிகர் விநாயகன். அவர் ஜெயிலர் 2ம் பாகத்திலும் நடித்திருக்கிறார். முதல் பாகத்தின் க்ளைமேக்ஸில் இறந்து விட்ட நிலையில் இரண்டாம் பாகத்தில் அவரது கதாப்பாத்திரம் எப்படி வரப் போகிறது என்ற் எதிர்பார்ப்பு இருக்கிறது.
தற்போது மலையாளத்தில் ஆடு 3 என்ற படத்தில் விநாயகன் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பில் அவர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கழுத்தை அசைக்க முடியாமல் வீல் சேரில் வந்தார் அவர். கழுத்து தோள்பட்டையில் dislocation, nerve பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது, அதை அப்படி விட்டு இருந்தால் செயலிழப்புக்கு ஆகி இருப்பேன் என விநாயகன் கூறி இருக்கிறார்.
இன்னும் 6 வாரங்கள் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறி இருக்கிறார்களாம்.








