Oct 28, 2025
Thisaigal NewsYouTube
கவிஞர் சினேகனின் தந்தை மரணம்
சினிமா

கவிஞர் சினேகனின் தந்தை மரணம்

Share:

தமிழ் சினிமாவில் புத்தம் புது பூவே என்ற படத்தின் மூலம் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானவர் சினேகன்.

இதுவரை 2500க்கும் அதிகமான பாடல்களை எழுதி உள்ள இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் அதிகம் பிரபலமானார். கவிஞர் மட்டுமின்றி, நடிகர், அரசியல்வாதி என பன்முகங்களைக் கொண்டவர்.

இவர் கன்னிகா ரவியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கவிஞர் சினேகனின் தந்தை சிவசங்கு (வயது 101) வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார்.

தனது தந்தை இறப்பு குறித்து சினேகன் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். 

Related News