Oct 17, 2026
Thisaigal NewsYouTube

வைரலாகும் தனி அந்தரங்க வீடியோ|சோஷியல் மீடியாவின் அநாகரிக முகமும்.. நடிகை ஓவியாவின் கூலான பதில்களும்!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வைரலாகும் தனி அந்தரங்க வீடியோ|சோஷியல் மீடியாவின் அநாகரிக முகமும்.. நடிகை ஓவியாவின் கூலான பதில்களும்!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ குறித்து நடிகை ஓவியா வெளியிட்டுள்ள பதில் ரசிகர்களை இன்னும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்று பல்வேறு விஷயங்கள் விரல் நுனியிலேயே செய்யப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக டிரெண்டிங்கில் உள்ள ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜியைப் பயன்படுத்தி எந்த ஒரு புகைப்படம் அல்லது வீடியோவை சுலபமாக மற்றொருவரின் முகத்தை வைத்து மார்பிங் செய்துவிட முடியும். அப்படியான வீடியோக்களுக்கு சில நடிகைகளும், பிரபலங்களும் இலக்காகி வருகின்றனர். இது, அவர்களுடைய புகழுக்கும் களங்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தற்போது நடிகை ஓவியாவும் சிக்கியுள்ளார். நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ எனச் சொல்லப்பட்டு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவின் நம்பத்தன்மை குறித்து இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. அதனால், அது உண்மைதானா என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை. ஒருவேளை அப்படியிருந்தால் நிச்சயம் அவருடைய அனுமதியில்லாமல் அதாவது திருட்டுத்தனமாக தான் கசியவிடப்பட்டிருக்கும். அப்படி நடந்திருந்தால் அது மிகவும் அநாகரிகமான செயல். அப்படி இல்லையென்றால் இது வெறுமனே கடந்து போகவேண்டிய விஷயம்.

இதுபோன்ற தங்களுடைய அந்தரங்க வீடியோக்கள் வெளியாகும்போது நடிகைகள் கருத்து தெரிவிப்பர். மேலும், அவர்களுக்கு ஆதரவாக பெண்கள் அமைப்பினரும் குரல் கொடுப்பர். தொடர்ந்து போலீஸிலும் புகார் அளிப்பர். ஆனால், இந்த வீடியோ குறித்து நடிகை ஓவியா வெளியிட்டுள்ள பதில் இன்னும் அதிகம் பேசுபொருளாகி உள்ளது.

அந்த வீடியோ குறித்து எந்தப் பதிலையும் சொல்லாத ஓவியாவிடம், அவரை டேக் செய்து நிறைய பயனர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வகையில், பயனர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, ’இது மர்மமாகவே இருந்துவிட்டுப் போகட்டும்; எனக்கும் லிங்க் அனுப்புங்கள்’ எனப் பதிலளித்துள்ளார். அடுத்து ஒரு பயனர் கேட்ட கேள்விக்கு, ’பார்த்து ரசியுங்கள்’ எனப் பதிலளித்துள்ளார். இன்னொரு பயனரோ, ‘அந்த வீடியோ இன்னும் கொஞ்சம் நீண்டநேரம் ஓடக்கூடியதாக இருந்திருக்கலாம்’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர், ’அடுத்த தடவை வரும் ப்ரோ” எனப் பதிலளித்திருப்பதுதான் இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது. மக்களிடம் பரபரப்பாகி வரும் இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டாமல், அதை ஊதி மேலும்

சமூக வலைதளத்தில் பற்ற வைத்திருப்பது ஓவியாவுக்கு எதிராக எதிர்வினைகளை ஆற்றத் தொடங்கியிருக்கிறது. அதேநேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக அவர், க்ரைம் போலீஸில் புகார் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஓவியாவின் பதிலாலும், அவருடைய அணுகுமுறையாலும் சினிமா உலகத்தை தாண்டியும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இன்னும் சிலரோ, இதேபோல பல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த பிரச்னைகளை எப்படி கையாள வேண்டும் என ஓவியாவை பார்த்து கற்றுக்கொள்ளலாம் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதாவது, அந்த வீடியோ உண்மையோ அல்லது மார்ஃபிங்கோ என எதுவாக இருந்தாலும் சரி, என்ன ஆனாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று அந்த பிரச்னையைச் சுமுகமாக முடிப்பதற்கு ஓர் ஆயதமாகத்தான் ஓவியா அப்படி பதில் அளித்திருப்பதாகக் கூறுகின்றனர்.

இந்த சமூகம் இந்த விவகாரத்தை எப்படி அணுகுகிறது என்பதைதான் தீவிரமாக பலரும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →