Nov 14, 2025
Thisaigal NewsYouTube
கார்த்தி நடிப்பில் வெற்றியடைந்த கொம்பன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் வேறொருவர்
சினிமா

கார்த்தி நடிப்பில் வெற்றியடைந்த கொம்பன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் வேறொருவர்

Share:

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்து 2015ஆம் ஆண்டு வெளிவந்த படம் கொம்பன். இப்படத்தில் லட்சுமி மேனன், கோவை சரளா, தம்பி ராமையா, ராஜ்கிரண், வேல ராமமூர்த்தி ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்தின் வெற்றிக்கு பின் இயக்குநர் முத்தையாவை அனைவரும் கொம்பன் முத்தையா என அழைக்கத் தொடங்கினார்கள். அவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்த படம் கொம்பன்.

ஆனால், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது நடிகர் கார்த்தி கிடையாதாம், நடிகர் சூர்யா தானாம். இது குறித்து பேட்டி ஒன்றில் இயக்குநர் முத்தையா வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

"கொம்பன் படத்தின் கதையை நான் முதலில் சூர்யா சாரிடம்தான் கூறினேன். அவர், 'இது எனக்கு செட்டாகுமா' என்று யோசித்தார். அதன் பின், அது கார்த்தி சாரிடம் போனது. கார்த்தி சார் ஓகே சொல்லி விட்டு, இது 'பருத்திவீரன்' மாதிரியே இருக்கும் என்று உணர்ந்தார். அதன் பின், ஸ்டில் ஷூட் எடுத்த பிறகுதான் அவருக்கு ஓகே ஆனது" என முத்தையா கூறியுள்ளார். 

Related News