Oct 20, 2025
Thisaigal NewsYouTube
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்
சினிமா

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்

Share:

தமிழ் சினிமாவில் ரொமான்ஸ் கலந்த நகைச்சுவை திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குநர் எம். ராஜேஷ். இவர் இயக்கிய பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி ஆகிய திரைப்படங்கள் மாபெரும் அளவில் வெற்றியடைந்தன. இதில் ஆர்யா - நயன்தாரா ஜோடியாக நடித்து வெளிவந்த திரைப்படம் தான் பாஸ் என்கிற பாஸ்கரன்.

இப்படத்தில் ஆர்யா - நயன்தாராவின் ஜோடியைத் தாண்டி, ஆர்யா - சந்தானத்தின் நகைச்சுவை கூட்டணி பேசக்கூடிய இருக்கும். மேலும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் என்றால் அது ஆர்யாவின் அண்ணன் கதாபாத்திரம் தான்.

இந்த கதாபாத்திரத்தில் நடிகர் சுப்பு பஞ்சு அருணாச்சலம் நடித்திருப்பார். ஆனால், முதன் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது இயக்குநரும் நடிகருமான சேரன் தானாம்.

அதற்கான பேச்சு வார்த்தையும் நடந்துள்ளது. ஆனால், அது சரியாக அமையவில்லை. அதனால் அவர் நடிக்கவில்லை. இந்த தகவலை இயக்குநர் ராஜேஷ் அண்னையப் பேட்டி ஒன்றில் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

Related News