Oct 20, 2025
Thisaigal NewsYouTube
பிரசாந்தின் அந்தகன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட காரணம் என்ன?
சினிமா

பிரசாந்தின் அந்தகன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட காரணம் என்ன?

Share:

இந்தியா, ஆகஸ்ட் 01-

பிரசாந்த் நடிப்பில் அவரின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள அந்தகன் திரைப்படம் அந்தாதூன் என்ற இந்தி படத்தின் ரீமேக். இந்த படம் உருவாகி சில ஆண்டுகள் ஆனபின்னும் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடந்தது.

நீண்ட நாட்களாக மார்க்கெட்டில் இல்லாத பிரசாந்த் இந்த படத்தின் மூலம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்த்துள்ளார். படத்தில் பிரசாந்துடன், பிரியா ஆனந்த், சிம்ரன் மற்றும் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென ஒரு வாரம் முன்பாக ஆகஸ்ட் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த முன்தள்ளிவைப்புக்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுவது என்னவென்றால் ஆகஸ்ட் 15 ஆம் தேதி விக்ரம்மின் தங்கலான் ரிலீஸ் ஆகிறது. கூடவே ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் ‘டிமாண்டி காலணி 2’ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

அதனால் அந்த படங்களோடு ரிலீஸ் ஆனால் தங்கள் படத்துக்கு 100 திரைகள் கூட கிடைக்காது என்பதால்தான் இந்த முடிவை அந்தகன் படக்குழு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Related News